search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை முயற்சி"

    • நாகேஷிடம் ஏன் குளத்திற்குள் இறங்கினாய் என விசாரித்தனர்.
    • என் மனைவி என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்வதால் கோபம் அடைந்து குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்றார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த கொம்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ். அப்பகுதியில் உள்ள ஜெயபேரி பூங்கா குளத்தில் திடீரென இறங்கினார்.

    குளத்தில் இறங்கிய நாகேஷ் எனது மனைவி என்னை அடித்து சித்ரவதை செய்கிறாள். அவளிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள் என கத்தியபடி இருந்தார்.

    நீண்ட நேரம் குளத்தில் கத்தியபடி இருந்த வாலிபரை வெளியே வருமாறு அப்பகுதி மக்கள் கூறினர்.

    ஆனால் வாலிபர் குளத்தில் இருந்து வெளியே வர மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி நாகேஷை வெளியே இழுத்து வந்தனர்.

    நாகேஷிடம் ஏன் குளத்திற்குள் இறங்கினாய் என விசாரித்தனர். என் மனைவி என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்வதால் கோபம் அடைந்து குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.

    குழந்தைகளிடம் பேசக்கூட அனுமதிப்பதில்லை. அப்பா இறந்து விட்டார் என குழந்தைகளிடம் தவறாக கூறுகிறாள். மேலும் அவரது மனைவி அடித்ததால் ஏற்பட்ட காயங்களை காட்டினார்.

    தினமும் என்னை அடிக்கிறார். என்னால் அடி வாங்க முடியவில்லை. விவாகரத்து வாங்கி கொடுங்கள் இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன் என வேதனையோடு தெரிவித்தார்.

    அங்கிருந்தவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். நாகேஷ் கூறிய விசித்திரமான வீடியோவை பார்த்தவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
    • ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவில் இடலாக்குடி புத்தன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெய்குமார் (வயது 26). திருமணமான இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.

    இவருக்கும் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது ஜெய்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஜெய்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே வந்துள்ளார்.

    அவர் கள்ளக்காதலி வீட்டுக்குத் தான் செல்வார் என கருதிய அவரது மனைவி, உறவினர் ஒருவர் துணையுடன் ஜெய்குமாரை பின் தொடர்ந்து வந்தார். கள்ளக்காதலி வீட்டுக்கு ஜெய்குமார் வந்த போது, திடீரென அவர் முன்பு மனைவி வந்துள்ளார். இதனால் ஜெய்குமார் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெய்குமாரை, மனைவியும் உறவினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் ஜெய்குமார் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வரவேற்பாளராக இருந்த அஜய் (21) விசாரணை மேற்கொண்டார். அப்போது திடீரென ஜெய்குமார், போலீஸ் நிலையத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார்.

    இதனை தடுக்க முயன்ற அஜய் மீதும் கண்ணாடியால் குத்தி உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஜெய்குமார், தனது உடலிலும் கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் ஆரல்வாய்மொழியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.

    சம்பவம் குறித்து போலீஸ் நிலைய வரவேற்பாளர் அஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்குமார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார்.
    • நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது டைல்ஸ் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். அவரது 2-வது மகளும் மனைவியுடன் சென்றுவிட்டார். இதனால் டைல்ஸ் வியாபாரி தனது மூத்த மகளுடன் வசித்து வந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த டைல்ஸ் வியாபாரி தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று தனது மூத்த மகளை பைக்கில் அழைத்துக் கொண்டு கொல்கத்தா சயின்ஸ் சிட்டிக்கு சென்றார்.

    அங்குள்ள மேம்பாலத்தில் பைக்கை நிறுத்தினார். மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார். அதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கூச்சலிட்டு அவரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவர் மேம்பாலத்தில் இருந்து இறங்கவில்லை.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் நுனியில் நின்று கொண்டிருந்த வியாபாரியிடம் தயவு செய்து கீழே இறங்குங்கள்.

    உங்கள் மகளின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை. தொடர்ந்து பாலத்தில் நின்று கொண்டே இருந்தார்.

    மேலும் அங்கிருந்த பொதுமக்களும் சத்தம் போட்டபடி அவரை தயவு செய்து குதிக்க வேண்டாம் என தெரிவித்தனர் .

    அந்நேரத்தில் தான் போலீசாருக்கு ஒரு யோசனை வந்தது. கொல்கத்தா சயின்ஸ் சிட்டி நகரில் பிரபல ஓட்டல் ஒன்றில் ருசியான பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.


    அது பற்றி டைல்ஸ் வியாபாரியிடம் கூறினர். தற்கொலை முடிவை கைவிட்டால் பிரபல ஓட்டலில் இருந்து பிரியாணி  வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர்.

    இதனை கேட்டதும் வியாபாரி தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு கீழே இறங்கினார். உடனடியாக அவருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தனர்.

    அதனை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இதனால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த சம்பவத்தால் சயின்ஸ்சிட்டி மேம்பாலத்தில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    வடபழனி, மசூதி தெருவை சேர்ந்தவர் தருண். இவர் மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். தினமும் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வடபழனிக்கு மெட்ரோ ரெயிலில் சென்று வருவது வழக்கம். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக தருண் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து நடை மேடையில் காத்திருந்தார்.

    அப்போது மெட்ரோ ரெயில் வந்தபோது திடீரென தருண் ரெயில் முன்பாய்ந்தார். என்ஜின் முன்பு சிக்கிய அவரை சிறிது தூரம் மெட்ரோ ரெயில் இழுத்து சென்று நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த தருண் அலறி துடித்தார். இதனை கண்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக பலத்த காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர் தருணின் பெற்றோர் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார்கள். தருண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நடைமேடையில் நிற்பதற்காக மெட்ரோ ரெயில் குறைந்த வேகத்தில் வந்ததால் அவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது குறித்து மீன்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனமுடைந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார்.
    • பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்டது நாகொண்டன ஹள்ளி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த அந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைதட்டியும் அந்த இளம்பெண் கதவை திறக்கவில்லை.

    உடனடியாக குடும்பத்தி னர் ஒயிட் பீல்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரும் அந்த பெண்ணை கதவை திறக்க சொன்னார்கள். ஆனால் அவர் திறக்க மறுத்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டையால் கதவை உடைத்து அறைக்குள் சென்று தீப்பெட்டியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணையும் 5 வயது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கியாஸ் கசிவையும் சரி செய்தனர். இது குறித்து பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.
    • வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாமோதரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன் (வயது 75). விவசாயி.

    இவர் அனுபவத்தில் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 சென்ட் இடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாதன் உறவினரான சின்னசாமி (58) என்பவர் 60 சென்ட் இடம் தனக்கு சொந்தமானது என கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் சின்னசாமிக்கு சாதகமான தீர்ப்பு பெற்றுள்ளார்.

    இதுகுறித்து கோர்ட் உத்தரவின்படி நேற்று சம்மந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த் துறையினர் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.

    இந்த நிலையில் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மாதன் மற்றும் அவரின் மகன் லட்சுமணன் வயது (33)மற்றும் மாதன் மகள்களான 4 பேர், ஒரு வயது குழந்தையுடன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் நிலம் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போர்களமாக மாறியது.

    பின்னர் சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறையினர், போலீசாரிடம் வருகிற 8-ந்தேதி நிலம் அளவீடு செய்ய வழிவகை செய்யும் விதத்தில் மாதன் மற்றும் சின்னசாமியிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் காண்பதாக உத்தரவாதம் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர்.
    • தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை அடுத்த வைராவிகுளத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளியம்மை (வயது 70).

    இவரது மகள் முருகம்மாள். இவர் மணிமுத்தாறில் உள்ள அரசு மீன் பண்ணையில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக வள்ளியம்மை வந்திருந்தார். அப்போது கூட்ட அரங்கில் வைத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து தலையில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து பாட்டிலை தட்டி விட்டனர். மேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது வள்ளியம்மை கூறுகையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் பணம் வாங்கி இருந்தேன். தற்போது அந்த தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

    எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்து இங்கு வந்தேன் என்று கூறினார்.

    • கள்ளக்காதலி வேறு ஒருவருடன் பழகியதால் வேதனை
    • 2 கைகளையும் அறுத்து கொண்டார்

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது வேன் டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து இளம்பெண் ஆனைமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் இளம்பெண் ஜாலியாக இருந்து வந்தார். இந்த விவகாரம் வேன் டிரைவருக்கு தெரிய வரவே அவர் தனது கள்ளக்காதலியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த வேன் டிரைவர் அவரது இடது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் வேன் டிரைவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இளம்பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக பதிவு செய்து இருந்தார். இதனை பார்த்த நெல்லையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேன் டிரைவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இளம்பெண் என்னுடைய மனைவி அவரை தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டி உள்ளார். இனால் மனவேதனை அடைந்த வேன் டிரைவர் அவரது வலது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் ஆனைமலை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னை ஏமாற்றிய இளம்பெண் மீதும், நெல்லையை சேர்ந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரவள்ளூர், கே.சி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல்(25). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்திற்கு திடீரென இமானுவேல் வந்தார். அப்போது அவர் போலீசார் தன் மீது அடிக்கடி பொய் வழக்கு போடுவதாக கூறியபடி பிளேடால் கழுத்து மற்றும் இடது கையை அறுத்துக் கொண்டார்.

    இதில் அவர் ரத்தம் சிந்தியபடி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இம்மானுவேலுக்கு 20 தையல்கள் போடப்பட்டது. அவருக்கு அங்கு தொடர்ந்து சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.
    • போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாசூரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது50).

    இவர் ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் காண்டிராக்டராக உள்ளார்.

    இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு வேத விக்னேஷ்வரி(13) என்ற மகளும் மோகன்ராம், அகிலேஷ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    வேத விக்னேஷ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சுப்புராஜூக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரது மில்லில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

    தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தார்.

    ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி அடைக்க முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். கடனை அடைக்க முடியாததை நினைத்து வருத்தப்பட்டும் வந்துள்ளார்.

    வேதவிக்னேஷ்வரியை, தினமும் சுப்புராஜ் தான் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு, மீண்டும் அழைத்து வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மகளை அழைப்பதற்காக பள்ளிக்கு சென்றார்.

    பின்னர் அங்கு மகளை அழைத்து கொண்டு கொல்லிமலைக்கு சென்றார். அங்குள்ள மலை உச்சிக்கு சென்ற அவர், திடீரென, அங்கிருந்து, மகளை தள்ளி விட முயற்சித்தார்.

    அப்போது சிறுமி தனது தந்தையிடம் பஸ்சுக்கு லேட் ஆகுது, எனக்கு பசிக்கிறது என கூறி தந்தையை அழைத்தார். இதையடுத்து, சுப்புராஜ் மகளுடன் ஈரோட்டுக்கு சென்றார்.

    பின்னர் பன்னாரி அம்மன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டு, அதனை மகளின் வாயில் ஊற்றி குடிக்க சொல்லியுள்ளார். ஆனால் சிறுமி குடிக்க மறுப்பு தெரிவித்து கதறி அழுதார்.

    குழந்தை அழுததை பார்த்ததும் பதறிபோன சுப்புராஜ், தனது மகளிடம் ரூ.70-யை கொடுத்து, நீ வீட்டுக்கு செல் நான் வந்து விடுகிறேன் என தெரிவித்து அனுப்பி வைத்தார்.

    சிறுமியும் அங்கிருந்து நேராக வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். வரும் வழியில் பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

    அன்னூர் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூச்சி மருந்துடன் காட்டுக்குள் சென்ற சுப்புராஜை வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுவரை அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • புவனேஸ்வரி போலீஸ்நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த உதய குமார். இவரது மனைவி சிந்து. கணவருடன் ஏற்பட்ட தகராறில் சிந்து அவரை பிரிந்து திருவொற்றியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் உதயகுமார் மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சிந்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது சிந்துவுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கூறி உதயகுமாரின் அக்காள் புவனேஸ்வரி போலீஸ்நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவருக்கு உடந்தையாக உதயகுமார் மற்றும் அவரது உறவினரான ஜெயந்தி இருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து உதய குமார், புவனேஸ்வரி, ஜெயந்தி ஆகிய 3 பேர் மீது போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
    • தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.

    இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×